Princiya Dixci / 2016 ஜனவரி 21 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
இரண்டரை வயதான தனது மகளை பிரம்பால் அடித்தது மட்டுமின்றி, கடித்துக் காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் 22 வயதான தந்தையொருவரை, எலுவங்குளம் பகுதியில் வைத்து, வனாத்தவில்லுவப் பொலிஸார், நேற்று செவ்வாய்க்கிழமை (19) கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், காயங்களுக்குள்ளான குழந்தையின் தாய் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குழந்தையின் உடலில் பிரம்பால் தாக்கப்பட்டமை, கடித்தமைக்கான அடையாளங்கள் உள்ளதாகவும் அக்குழந்தை தற்போது புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் வனாத்தவில்லுவ பொலிஸார் தெரிவித்தனர்.
என்ன காரணத்துக்காக சந்தேகநபர், இவ்வாறு நடந்துகொண்டார் என்பது இன்னமும் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



23 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
2 hours ago