2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்

Editorial   / 2018 ஜனவரி 17 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பேகமுவ, கண்டியபிட பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் அவரது மனைவியை கொன்று கழிப்பறைக் குழியில் வைத்திருந்தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கொடவெஹேரமங்கட பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதானவர் என பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உடல் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்கான ஆயத்தங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹம்பேகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .