2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

மஹியங்கனையில் தாயும் மகளும் படுகொலை

Editorial   / 2018 ஏப்ரல் 21 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனைப் பிரதேசத்தில் தாயும் மகளும், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம், மஹியங்கனை, மாபாகடவௌ பகுதியில் நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது.

மாபாகடவௌ பகுதியைச் சேர்ந்த 59 வயதான பெண்ணும் அவரது 40 வயதான மகளுமே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளவர்கள் எனப்  பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகன் வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மஹியங்கனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .