2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

முத்து மோசடியில் ஈடுபட்ட ஐவர் கைது

ஆர்.மகேஸ்வரி   / 2017 டிசெம்பர் 24 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 புதையல் தோண்டும் போது கிடைத்ததாக தெரிவித்து  420 முத்துக்களை விற்க முனைந்த   ஐந்து சந்தேகநபர்கள் ​கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கலேவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனாதன, கலேவல பிரதேசத்தில் ​நேற்று (23) மாலை 3 மணியளவில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த முத்துக்கள் புதையல் மூலம் சந்தேகநபர்கள் பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 40, 42, 27, 34 மற்றும் 35 வயதானவர்கள் எனவும், இவர்கள் கலேவல, பசறை, வெளிக்கந்த, மஹாஓயா மற்றும் திஸ்ஸமகாராம பகுதிகளைச் ​சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர.

சந்தேகநபர்கள் ஐவரும் இன்றைய தினம் (24) தம்புளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தம்புளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .