Editorial / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மூன்று வெவ்வேறு இடங்களில் இன்று (03) இடம்பெற்ற வீதி விபத்துகளில் மூவர் பலியாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்பிலிபிட்டிய-இரத்தினபுரி வீதி, 6ஆவது சந்தியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 6.45 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
பக்கமூன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியபெந்தும பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வயோதிபப் பெண்மணி மீது மோதியுள்ளது. இதில் காயமடைந்த பெண்மணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 7.15 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, வெலிக்கடை- நாவல வீதியில் லொறி கட்டுப்பாட்டை இழந்து மதில் ஒன்றுடன் மோதியுள்ளதன் காரணமாக அதில் பயணம் செய்த ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025