Editorial / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை நகரிலுள்ள நகைக் கடையொன்றில், சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைளைத் திருடிய குற்றச்சாட்டில், சந்தேகநபர்கள் இருவரை, சி.சி.டி.வியின் உதவியுடன், பொலிஸார், இன்று (1) கைதுசெய்தனர்.
தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில், வியாபார நிலையத்தின் உரிமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், வியாபார நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வியின் காட்சிகளையும் பார்வையிட்டுள்ளனர்.
மேற்படி பெண்கள் இருவரும், கைக்குழந்தையொன்றுடன் வந்து, நகைகளைக் திருடும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்ததை அவதானித்த பொலிஸார், குறித்த இருவரையும் கைதுசெய்துள்ளனர்.
அவ்விருவரும், கடையில் வைக்கப்பட்டிருந்த 54 தோடுகள், ஒரு நெக்லஸ், இரண்டு மோதிரங்கள் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் எனக் குறிப்பிடப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
9 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
15 Nov 2025