2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

வாள்வெட்டில் இளைஞன் பலி

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சங்குவேலி வடக்கு மானிப்பாய் பகுதியில் இன்று வியாழக்கிழமை (18) அதிகாலை இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சிவகுமார் பிரணவன் (வயது 30) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.

வாள்கள் மற்றும் பொல்லுகள் சகிதம் மேற்படி இளைஞனின் வீட்டுக்கு அதிகாலை 1:30க்கு வந்த இளைஞர்கள் குழு இவ் வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளனர்.

படுகாயங்களுக்குள்ளான மேற்படி இளைஞன், சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் கூறினர்.

மேற்படி சம்பவம் தனிப்பட்ட ஒரு பிரச்சிணை காரணமாக இடம்பெற்று இருக்கலாம் எனவும் இவ் வாள்வெட்டுடன் ஆவா குழுவினைச் சேர்ந்த நபர்களுக்குத் தொடர்புபட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.

சம்பவ இடத்துக்கு தடஅறிவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .