2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

வர்த்தக நிலையம் கொள்ளை ; துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்

Editorial   / 2018 ஜனவரி 10 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று(09) இரவு கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிலையத்தினுள் துப்பாக்கியுடன் புகுந்த இருவர், பணத்தை கொள்ளையிட்டதுடன், வர்த்தக நிலையத்தின் உரிமையாளரையும் அவரது சகோதரரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பித்துச் சென்றுள்ளனர்.

இதன்போது, காயங்களுக்குள்ளான இருவரையும், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்

இவ்விடயம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .