2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

வல்லப்பட்டடையுடன் ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் திங்கட்கிழமை(7) கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 140 கிராம் வல்லப்பட்டடையையும் கைப்பற்றியுள்ளனர்.

தெரணியகலையை சேர்ந்த நபரொருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து, மாத்தளையில் இருந்து தெரணியகலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியை சோதனை செய்த பொலிஸார், அதிலிருந்த வல்லப்பட்டடையை கைப்பற்றியுள்ளதுடன் மேற்படி நபரை கைதுசெய்துள்ளனர்.

இந்நபர் வல்லப்பட்டையை மாத்தளை இரத்தோட்டை பிரதேசத்திலிருந்து, கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்வல்லப்பட்டையின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .