2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

வாள்வெட்டில் இருவர் படுகாயம்

Yuganthini   / 2017 ஜூலை 31 , மு.ப. 11:00 - 1     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மானிப்பாய் - லோட்டஸ் வீதியில், இரு குழுக்களுக்கு  இடையில் இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம், நேற்று  (30) மாலை இடம்பெற்றது.

இச்சம்பவத்தில், தனுராஜ் (வயது 22) மற்றும் விக்னராஜா ஜீவராஸ் (வயது 22) ஆகியோரே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

 தனிப்பட்ட விரோதமே, இச்சம்பவத்துக்கு காரணம் தெரிவித்த மானிப்பாய் பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.


  Comments - 1

  • Thiyagarajah Vigneswaran Friday, 11 August 2017 03:44 AM

    யாழ்ப்ப்பாணத்தில் வாள்வெட்டு ,போதை வஸ்து கலாச்சாரம் தெடங்கியது இன்று நேற்று அல்ல. இதனால் பாதிக்கப்படாதவர்கள் ஒன்று இரண்டு அல்ல . இன்று காவல் துறையினர் பாதிக்கப்பட்டார்கள் என்பதிற்காக இன்று நடவடிக்கையை துரிதப்படுத்தியது போல் ஆரம்பத்தில் எடுத்து இருந்தால் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இருக்காது . வடக்கு கிழக்கும் இலங்கைக்குள் தான் இருக்குது . அங்கு வாழும் மக்களுக்கு இழுக்கு எற்படுமானால் அது முழு இலங்கைக்கும் தன பாதிப்பு என்பதனை முழு அரசியல்வாதிகளும் மனதில் நினைக்க வேண்டும். பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் வேற்று சமூகம் அல்ல. அவர்களும் சமூகத்தில் ஓர் அங்கமே . அவர்களுக்கு ஒரு பாதிப்பு வரும் போது நடவடிக்கை என்றால் அது ஜீரணிக்க முடியாது . நன்றி !!!!!!!!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .