2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வியட்நாம் பிரஜைகள் ஐவர் கட்டுநாயக்கவில் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 20 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.கே.ஜி. கபில

போலியாகத் தயாரிக்கப்பட்ட தென்னாபிரிக்க கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி யுக்ரேனுக்கு செல்ல முயற்சித்த வியட்நாம் பிரஜைகள் ஐவர் இன்று பகல் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஐவரும் 30 வயதுடையவர்களென்றும் இவர்கள் ஐவரும் கடந்த 18ஆம் திகதி அதிகாலை 12.40 மணியளவில் மலேசியாவிலிருந்து மலிந்தோ விமான சேவையான ஓ.பி.185 என்ற விமானம் மூலம் 60 வயதுடைய தென்னாபிரிக்க பிரஜையொருவருடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.

பின்னர் இன்று காலை 11.05 மணியளவில் யுக்ரேன் நோக்கி செல்வதற்காக வருகைத் தந்தப் போதே கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .