2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

ஹாவாஹெலிய பெண்ணின் உடலில் 17 வெட்டுக்காயங்கள்: பலருக்குத் தொடர்பு?

Editorial   / 2017 நவம்பர் 20 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

நுவரெலியா, ஹாவாஎலிய பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை(17) வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஹாவாஎலிய கெமுனு மாவத்தையைச் சேர்ந்த பெரியசாமி சாமிலா (வயது 41) என்ற பெண்ணின் உடலில், 17 வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக நுவரெலிய பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் பலர் தொடர்புப்பட்டிருக்கலாமென, அப்பெண்ணின் உறவினர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடையவரென கருதப்படும் அப்பெண்ணின் கணவரை இதுவரை கைதுசெய்யவில்லை என்றும், விஷமருந்திய நிலையில் மீட்கப்பட்ட அந்நபர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றாறென்றும் நுவரெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன பஸ்நாயக்க, நேற்றுத் தெரிவித்தார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவரென கருதப்படும் அப்பெண்ணின் கணவர் விஷமருந்த நிலையில் மீட்கப்பட்டதுடன், அவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இரண்டு பிள்ளைகளின் தாயாரன மேற்படி பெண், தனது கணவரிடமிருந்து விவகாரத்துப் பெற்றவரென்றும் தனது இரு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளாரென்றும் தெரியவருகிறது.

இவர் வெளிநாட்டுக்குப் பணிபெண்ணாக செல்லவிருந்த நிலையிலேயே, இவ்வாறு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பெண், நன்கு கராத்தே பயிற்சி பெற்றவரென்றும் இவரது கொலைக்கு ஒருவர் மட்டும் காரணமாக இருக்க முடியாது என்றும் உறவினர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய அப்பெண்ணின் கணவரை இன்று கைதுசெய்யவுள்ளதாவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். பெண்ணின் சடலம் நேற்று(19) நல்லடக்கம் செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .