Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஆர்.மகேஸ்வரி / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
உரிய அமைச்சர்கள் சபைக்கு வருகை தராமையால், வாய்மூலக் கேள்விகளுக்கு உரிய பதில்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்படுகின்றனவென, நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் கவனத்துக்கு மீண்டும் ஒருமுறை கொண்டு வருவதாக, நேற்று (20) தெரிவித்தார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் போது, வாய்மூல விடைகளுக்கான கேள்வி நேரத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரளவிடம், சில கேள்விகளை முன்வைத்திருந்தார்.
எனினும், அமைச்சர் தலதா அத்துகோரள சபைக்கு வருகை தராமையால், இதற்கான பதிலை, அமைச்சரும் அரசாங்கத்தின் பிரதம கொறடாவுமாகிய கயந்த கருணாதிலக முன்வைத்தார்.
இதனையடுத்து, இதுகுறித்து நளிந்த ஜயதிஸ்ஸ எம்.பியால் குறுக்குக் கேள்வி எழுப்பப்பட்ட போது, “குறுக்குக் கேள்வி எழுப்புவதாயின், தயவுசெய்து அதற்குப் பொறுப்பான அமைச்சரிடம் தான் எழுப்ப வேண்டும்” என, அமைச்சர் கயந்த குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட, எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா அநுர குமார திஸாநாயக்க, “பொறுப்பான அமைச்சர் சபைக்கு வந்தால் தானே, அவரிடம் எமது கேள்விகளை எழுப்ப முடியும்?” என்றார்.
இதன்போது, “உங்களது கேள்விகளைத் தாருங்கள். உரிய அமைச்சரிடம் நான் கையளித்து, தேவையான பதிலைப் பெற்றுத் தருகிறேன்” என அமைச்சர் கயந்த தெரிவித்த போது, “எவ்வாறு வழங்குவீர்கள், ஹன்சார்ட் அறிக்கை மூலமா அல்லது நகல் பிரதி எடுத்தா அல்லது கடிதம் மூலமா?” என, அநுர குமார வினவினார்.
“என்னிடம் உங்களது கேள்விகளைத் தாருங்கள். இறுவட்டு மூலம் நான் அமைச்சருக்கு அனுப்புகிறேன்” என, அமைச்சர் கயந்த உறுதியளித்தார்.
இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, வாய்மூல விடைகளுக்கான கேள்வி நேரத்தின் போது, குறித்த கேள்விகளுக்குப் பதில் வழங்க, பொறுப்பான அமைச்சர்கள் சபைக்கு வருவது குறித்து, நிலையியற் கட்டளையிலும் குறிப்பிடப்பட்டுள்ளதென்பதை நினைவுபடுத்தினார்.
22 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago