2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

‘அறிக்கையை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன்’

Editorial   / 2019 ஜனவரி 23 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்   

சபைக்குள் இடம்பெற்ற குழப்பகரமான நிலைமைகள் தொடர்பில், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாசிறி தலைமையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன் என்று சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.   

நாடாளுமன்றன்றத்தில் குழப்பம் ஏற்படுத்திய எம்.பிகளுக்கு எதிராக, நிலையியற் கட்டளையின் கீழும், குற்றவியல் சட்டத்தின் கீழும் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பது தொடர்பாகவும் இந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.   

நாடாளுமன்றத்தில், கடந்த நவம்பர் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக, ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் நேற்று (22) கையளிக்கப்பட்டுள்ளது.  

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு பின்னர் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலைமைகளை தொடர்ந்து, நவம்பர் 14ஆம் திகதி முதல் நாடாளுமன்றம் மீண்டும் கூடியதுடன் அதன்போது சபையில் கடும் குழப்ப நிலைமைகள் ஏற்பட்டிருந்தன.  

மஹிந்த அணியினரும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் கடுமையான குழப்பத்தை விளைவித்திருந்தனர். இதனால், எம்.பிக்கள் சிலர் காயமடைந்தனர். நாடாளுமன்ற உடமைகளுக்கும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .