Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
யுத்த காலத்தின்போது தடையெதுவுமின்றி பயிர்செய்கைகள் மேற்கொள்ளப்பட்ட காணிகளில் கூட யுத்தத்தின் பின்னர் அந்த நடவடிக்கைகளை தொடர்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், நேற்று(08) நடைபெற்ற நிதி அமைச்சின் கட்டளைச் சட்டங்களின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
மாற்று நிலை நீதியைப் பொறுத்த வரையில் தீர்க்கப்பட வேண்டிய காணி விவகாரங்களும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
வடக்கைப் போன்று கிழக்கிலும் காணிப் பிரச்சினைகள் நிலவுவதாகவும், யுத்த காலத்தின் போது எந்த தடங்கல்களுமின்றி பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்ட காணிகளில் கூட யுத்தத்தின பின்னர் தற்போது அந்த நடவடிக்கைகளை தொடர்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.
‘லஹுகல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரதெல்ல மேற்கு பகுதியில் 151 ஏக்கர் காணிகளில் பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு வந்த 63 - 75 குடும்பங்ளுக்கு தற்போது அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 1978ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் அங்கு பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
எனினும், வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டு வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் அந்த மக்கள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் வனப்பாதுகாப்பு பிரதேசமொன்று வர்த்தமானியின் மூலம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஒரு மாத காலத்துக்குள் நாடாளுமன்றத்தில் அதற்கான அனுமதி பெறப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது காலாவதியாகிவிடும் என்றார்.
29 minute ago
33 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
33 minute ago
1 hours ago
2 hours ago