Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மே 05 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
"நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கொலம்பியாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்ள அரசாங்க செலவில் தனது 11 வயது மகனை அழைத்துச்சென்றார்" என, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீர, நாடாளுமன்றில் இன்று(05) தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
"கடந்த அரசாங்கத்தின் காலத்தில் விமல் வீரவன்ச கொலம்பியாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்ள, இலங்கையின் பிரதிநிதியாக, அவர்களுக்கு வழங்கப்படும் சலுகையுடன், அரசாங்க பணத்தில் மகனை அழைத்துச் சென்றார்.
"இதற்கான தகவல்கள் வெளிவிவகார அமைச்சில் உள்ளதுடன், அதற்கான ஆவணத்தில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கையெழுத்திட்டுள்ளார்" என்றார்.
இதன்போது குறுக்கிட்ட விமல் வீரவன்ச, "இல்லை இது முற்றிலும் பொய்யான தகவல். மகன் தனிப்பட்ட செலவில்தான் அங்கு சென்றார். அவர் மாநாட்டில் கலந்துகொள்ள செல்லவில்லை" என்றார்.
அதற்கு பதிலளித்த மங்கள, "அவரை அரசாங்க செலவில் அழைத்துச் சென்றமைக்கான ஆதாராங்கள் உள்ளன. அதனை பொய்யென்று மறுக்க முயற்சிக்க வேண்டாம்" என்றார்.
இதன்போது எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, "சபாநாயகரே, இவர் பிரேரணையை முன்வைக்க எழுந்துவிட்டு இப்போது தனிப்பட்ட விடயங்களை பற்றி கதைக்கின்றார்" என்றார்.
அதன்போது மங்கள, "நீங்கள் கொஞ்சம் அமருங்கள், 2,500 ரூபாய் கொடுப்பனவில் வாழ்க்கையை நடத்த பழக்கப்பட்டவர் நீங்கள்" என்றார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago