Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அழகன் கனகராஜ்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னிலை சோஷலிஷக் கட்சியின் தலைவரான குமார் குணரட்னத்தை நாடு கடத்தமாட்டோம் என்று உள்ளக அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, தினேஷ் குணவர்தன எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குமார் குணரட்னத்தை, நாட்டிலிருந்து ஒருபோதும் வெளியேற்ற மாட்டோம். ஏனென்றால் அவரது பெற்றோர் இலங்கையிலேயே இருக்கின்றனர். அத்துடன், இரட்டை கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளும் தகுதியும் அவருக்கு இருக்கின்றது. எனினும், இலங்கையில் மட்டும் பிரஜா உரிமையை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றால் அவர், அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையைக் கைவிடவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே எழுந்த சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, குணரட்னத்தை கடந்த அரசாங்கமே கடத்தியது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .