Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
George / 2017 மார்ச் 24 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
“அரசியலமைப்புப் பணிகளையும் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவையும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி புறக்கணிப்பதாக உண்மைக்குப் புறம்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “நாடாளுமன்றத்தில் இடம்பெறும் அனைத்துக் குழுக் கூட்டங்களிலும் புதிய அரசியலமைப்பு பணிகளிலும் நாம் பங்குகொள்கின்றோம். ஆனால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, அரசியலமைப்பு பணிகளைப் புறக்கணிப்பதாக உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்றிணைந்த எதிரணி புதிய அரசியலமைப்பின் வழிநடத்தல் குழுவினை நாம் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை” என்றார்.
இதன்போது குறுக்கிட்ட சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, “1972, 1977 அரசியலமைப்பு உருவாக்கத்தின் தமிழ்த் தரப்பு அதனை புறக்கணித்தது. ஆனால், இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலைக்கு வந்துள்ளது. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் முதற்தடவையாக அனைத்துக் கட்சிகளும் பங்கு கொள்கின்றன. இது பெரும் வெற்றியாகும்.
நல்ல அரசியல் அமைப்பொன்றினை உருவாக்கிக் கொள்வதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுக்கூட்டங்களில், தினேஷ் குணவர்தன எந்தநாளும் பங்கு கொள்கின்றார். எனவே, ஊடகங்கள் பொய்யான செய்திகளை பிரசாரம் செய்து அரசியலமைப்பு நடவடிக்கைகளை குழப்ப முற்படுகின்றன” என்றார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “நாடாளுமன்றத்தில் இடம்பெறும் அனைத்துக் குழுக் கூட்டங்களிலும் புதிய அரசியலமைப்பு பணிகளிலும் நாம் பங்குகொள்கின்றோம். ஆனால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, அரசியலமைப்பு பணிகளைப் புறக்கணிப்பதாக உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்றிணைந்த எதிரணி புதிய அரசியலமைப்பின் வழிநடத்தல் குழுவினை நாம் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை” என்றார்.
இதன்போது குறுக்கிட்ட சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, “1972, 1977 அரசியலமைப்பு உருவாக்கத்தின் தமிழ்த் தரப்பு அதனை புறக்கணித்தது. ஆனால், இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலைக்கு வந்துள்ளது. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் முதற்தடவையாக அனைத்துக் கட்சிகளும் பங்கு கொள்கின்றன. இது பெரும் வெற்றியாகும். நல்ல அரசியல் அமைப்பொன்றினை உருவாக்கிக் கொள்வதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுக்கூட்டங்களில், தினேஷ் குணவர்தன எந்தநாளும் பங்கு கொள்கின்றார். எனவே, ஊடகங்கள் பொய்யான செய்திகளை பிரசாரம் செய்து அரசியலமைப்பு நடவடிக்கைகளை குழப்ப முற்படுகின்றன” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
50 minute ago
56 minute ago
2 hours ago