Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஜனவரி 26 , மு.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
1972 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் “தமிழ்ப் பிரிவினைவாதப் பயங்கரவாதம்” காரணமாக, மரணமடைந்த மற்றும் காயமடைந்த பல்வேறு தரப்புகள் தொடர்பில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு, இரண்டுவார கால அவகாசத்தை அரசாங்கம் கோரியது.
நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்றுப் பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், வாய்மூலவிடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான உதய பிரபாத் கம்மன்பில, பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரிடம், “தமிழ்ப் பிரிவினைவாதப் பயங்கரவாதம்” தொடர்பில் கேள்வி கேட்டிருந்தார்.
தனது கேள்வியில், “1972 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தமிழ்ப் பிரிவினைவாதப் பயங்கரவாதம் காரணமாக, மரணமடைந்த மற்றும் காயமடைந்த சிவில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட இராணுவ அங்கத்தவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு? “மரணமடைந்த மற்றும் காயமடைந்த பயங்கரவாதிகளின் மற்றும் பொது மக்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு?” எனக்கேட்டிருந்தார்.
கேள்விகளுக்குப் பதிலளித்துகொண்டிருந்த அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக, இக்கேள்விக்குப் பதிலளிப்பதற்கு உரிய அமைச்சர், இரண்டுவாரகால அவகாசத்தை கோரியுள்ளார் என்றார்.
32 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
43 minute ago