Niroshini / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அழகன் கனகராஜ்
ஊடக சுதந்திரத்துக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் பாதிப்பேற்படுத்தாத வகையில் மதக் குரோத செயற்பாடுகளுக்கு எதிராக சட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் வெகுஜன ஊடக பிரதியமைச்சரான கருணாரத்ன பரணவித்தாரன தெரிவித்தார்.
புதிய சட்டமொன்றை உருவாக்கமுடியாவிடின், இருக்கும் சட்டத்தையேனும் பலப்படுத்தவேண்டும் என்றும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற
தேசிய கலந்துரையாடல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு மீதான குழு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த வாசுதேவ நாணயக்கார, தமது அமைச்சுக்கான பல செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுத்தார். இதற்கு இணங்க நல்லாட்சியில், நல்லிணக்க செயற்பாடுகள் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மனோ கணேசனும் சிறப்பான அர்ப்பணிப்புடன் தனது பணியை மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சும் ஊடகத்துறை அமைச்சும் இணைந்து அடுத்தாண்டு முதல் நல்லிணக்கம் தொடர்பில் புதிய தொலைக்காட்சி அலைவரிசையொன்றை ஆரம்பிக்கவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026