Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2017 பெப்ரவரி 10 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பினருக்கும் எதிர்தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து மோதல்களின் போது, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, ஒன்றிணைந்த எதிரணியைப் பார்த்து ‘வாயை மூடு முட்டா ள்’ என்று கூறிவிட்டார்.
நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (09) காலை 10:30க்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்தன் பின்னர், எழுந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான, தினேஷ் குணவர்தன,
நிதி அமைச்சின் கட்டளைச் சட்டங்களின் கீழான கட்டளைகளை அங்கிகரிப்பதற்கான மூன்று பிரேரணைகள் மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (08) இடம்பெற்றது.
இந்த மூன்று பிரேரணைகளுக்கும் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. எனினும், அந்தத் திருத்தங்களில் ஒரேயொரு பிரேரணைக்கான திருத்தம் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளது. ஏனைய திருத்தங்களை அரசாங்கம் மறைத்துவிட்டது என்று சுட்டிக்காட்டினார்.
இதன்போது எழுந்த சபைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, அது வேண்டுமென்றே விடப்பட்டது அல்ல. சிறு தவறு ஏற்பட்டுவிட்டது. அவற்றை திருத்துவதற்கு நீண்டநாட்கள் தேவையில்லை. உடனடியாக திருத்தலாம் என்றார். எனினும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், சபைமுதல்வரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர்.
சற்று பதற்றமடைந்த சபைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, “வாயை மூடு முட்டாள்” என்று, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பார்த்து கூறிவிட்டார். இதனால், சபையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சபையமர்வை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்த சபாநாயகர், கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூடிய, பிரேணைகளின் மீதான திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
முற்பகல் 11:10 மணியளவில் சபை மீண்டும் கூடியதுடன், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் ஆரம்பிக்கப்பட்டது.
வினாக்களுக்கான நேரம் நிறைவடைந்ததன் பின்னர், கருத்துரைத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, திருத்தங்கள் உள்ளடக்கப்படவில்லை என்ற விவகாரம், புதன்கிழமை இரவே எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதுபோன்ற சம்பவம் இடம்பெறுவது இது முதல்தடவையல்ல. இதற்கு முன்னரும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று சுட்டிக்காட்டியது. தவறுக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
3 hours ago