Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 23 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
“இலங்கையில் வருடமொன்றின் உள்நாட்டு நுகர்வுக்காக, 31,625 மெற்றிக்தொன் மாட்டிறைச்சியும் 1 இலட்சத்து 65 ஆயிரம் மெற்றிக்தொன் கோழியிறைச்சியும் தேவைப்படுகின்றன” என, கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தளவிலான இறைச்சி கேள்வியை நிறைவுசெய்வதற்காக, 50 ஆயிரம் ஆடுகள், 1 இலட்சத்து 67 ஆயிரம் மாடுகள், 13 கோடியே 20 இலட்சம் கோழிகளும் கொல்லப்படுகின்றன என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் காலை 10.30 மணிக்கு கூடிய நாடாளுன்ற அமர்வின்போது, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எம்.பி, எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் இதனை தெரிவித்தது.
இலங்கையில் வருடாந்த நுகர்வுக்காக தேவைப்படும் இறைச்சி வகைகளின் தொகை, இறக்குமதி செய்யப்படுகின்ற நாடுகள், இறைச்சி ஏற்றுமதி செய்யப்படும் தொகை, இதற்காக கொல்லப்படுகின்ற மிருகங்களின் எண்ணிக்கை, இவற்றின் ஊடாக நாட்டுக்கு கிடைக்கும் வருமானம் என்பன தொடர்பில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சிடம் புத்திக பத்திரண எம்.பி, கேள்வியெழுப்பினார்.
அவருக்கு பதிலளிக்கும் வகையில், பொருளாதார அலுவல்கள் அமைச்சு மேற்கண்ட தரவுகளை வெளியிட்டது.
அந்தத் தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வருடாந்த நுகர்வுக்காக, 1, 696 மெற்றிக்தொன் ஆட்டிறைச்சியும் 1 இலட்சத்து 65 ஆயிரம் மெற்றிக்தொன் கோழியிறைச்சியும் 131 மெற்றிக்தொன் செம்மறி ஆட்டிறைச்சியும் 31 ஆயிரத்து 625 மெற்றிக்தொன் மாட்டிறைச்சியும் தேவைப்படுகின்றன.
எனினும், இந்தளவு இறைச்சியை உற்பத்தி செய்யும் ஆற்றல் இலங்கையில் இல்லாமை காரணமாக, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளிடமிருந்து 297 மெற்றிக்தொன் ஆட்டிறைச்சியும் 131 மெற்றிக்தொன் செம்மறி ஆட்டிறைச்சியும் 85 மெற்றிக்தொன் மாட்டிறைச்சியும் 2016 ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்டன.
அதேநேரம், 0. 008 மெற்றிக்தொன் ஆட்டிறைச்சியும் 1,473 மெற்றிக்தொன் கோழியிறைச்சியும் 67 மெற்றிக்தொன் மாட்டிறைச்சியும் கடந்த வருடத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டது. இதன் ஊடாக 166.9 மில்லியன் ரூபாய் வருமானம் நாட்டுக்குக் கிடைத்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
2 hours ago