Princiya Dixci / 2017 மே 05 , மு.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
நாடாளுமன்றம், ஒரு நிமிடம், நேற்று(04, இருளில் மூழ்கியது. சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது.
வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினரான பத்ம உதயசாந்தவின் கேள்விகளுக்கு சபைமுதல்வரும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல பதிலளித்துக் கொண்டிருந்தார்.
சரியாக 11.16 மணிக்கு நாடாளுமன்றின் சகல மின்விளக்குகளும் திடீரென அணைந்து, சபையே இருளில் மூழ்கியது. அத்துடன், சபைக்குள் பொருத்தப்பட்டிருந்த பிரதான பெரிய திரையைத் தவிர ஏனைய தொலைக்காட்சிகளும் செயலிழந்தன.
எனினும், உறுப்பினர்களுக்கான ஒலி வாங்கிகள் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தமையால், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, பதில் வழங்குவதை நிறுத்தாது தொடர்ந்தும் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
பின்னர், 11.17 மணிக்கு மீண்டும் சகல விளக்குகளும் ஒளிர ஆரம்பித்தன. இதன்போது கருத்துரைத்த பத்ம உதயசாந்த, நாடும் இருளில் மூழ்கியது, சபையும் இருளில் மூழ்கியது என்றார்.
9 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026