2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

காலிறுதியில் ஜுவென்டஸ், ஏ.சி மிலன்

Editorial   / 2020 ஜனவரி 16 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா இத்தாலியா தொடரின் காலிறுதிப் போட்டிக்கு, ஜுவென்டஸ், ஏ.சி மிலன் ஆகியன தகுதிபெற்றுள்ளன.

தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற உடினீஸுடனான இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியொன்றில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு ஜுவென்டஸ் தகுதிபெற்றிருந்தது.

ஜுவென்டஸ் சார்பாக, போலோ டிபாலா இரண்டு கோல்களையும், கொன்ஸலோ ஹியூகைன், டக்ளஸ் கொஸ்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

இப்போட்டியில் உடல்நிலை சரியில்லாமை காரணமாக ஜுவென்டஸின் நட்சத்திர முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற எஸ்.பி.ஏ.எல்லுடனான இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்கு ஏ.சி மிலன் தகுதிபெற்றிருந்தது.

ஏ.சி மிலன் சார்பாக, கிர்யுஸ்டொஃப் பியடெக், சமு கஸ்டிலெஜோ, தியோ ஹெர்ணான்டஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .