2021 மே 15, சனிக்கிழமை

சந்தேஸ் இன்டர் மிலனுக்கு செல்ல யுனைட்டெட்டும் இன்டர் மிலனும் இணங்கின?

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனுக்கு கடனடிப்படையில் தமது முன்களவீரர் அலெக்ஸிஸ் சந்தேஸ் செல்ல இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் இணங்கியதாக தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில், சிலி சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் முன்களவீரரான அலெக்ஸிஸ் சந்தேஸின் சம்பளத்தின் பகுதியொன்றை மன்செஸ்டர் யுனைட்டெட் செலுத்தும் ஒப்பந்தத்தில் நடப்புப் பருவகாலத்தில் இன்டர் மிலனில் அவர் விளையாடவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அலெக்ஸிஸ் சந்தேஸின் வாரத்துக்கு 391,000 ஸ்டேர்லிங் பவுண்ஸ்கள் சம்பளத்தில் ஆறு மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களை மன்செஸ்டர் யுனைட்டெட் பங்களிக்கும் 10 மாத கடனடிப்படையிலேயே இன்டர் மிலனுக்கு அலெக்ஸிஸ் சந்தேஸ் வழங்கப்படவுள்ளார் எனத் தெரிகிறது.

அந்தவகையில், அலெக்ஸிஸ் சந்தேஸின் 9.46 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்கள் சம்பளத்தையும், கடன் கட்டணமொன்றையும் மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு இன்டர் மிலன் செலுத்தவுள்ளது.

குறித்த கடன் ஒப்பந்த்ததில், அலெக்ஸிஸ் சந்தேஸை நிரந்தரமாக ஒப்பந்தம் செய்வதற்கான தெரிவு காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலிலிருந்து கடந்தாண்டு ஜனவரியில் மன்செஸ்டர் யுனைட்டெட்டில் இணைந்திருந்த அலெக்ஸிஸ் சந்தேஸ், 45 போட்டிகளில் ஐந்து கோல்களை மாத்திரமே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .