2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

ஆரம்பமாகின்றது றபீக் கிண்ணத் தொடர்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நூருல் ஹுதா உமர்

விளையாட்டினுடாக சகோதரத்துவம் வளர்ப்போம் எனும் தொனிப்பொருளில், அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த 32 முன்னணி கழகங்கள் கலந்து கொள்ளவுள்ள றபீக் கிண்ண மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடர், சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் நாளை மாலை ஆரம்பமாகவுள்ளது.

பிளாஸ்டர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், கழக முகாமையாளர் எம்.ஐ.எம். பஸ்மீரின் நெறிப்படுத்தலில் பிளாஸ்டர் விளையாட்டு கழக தவிசாளர் ஏ.எல். முஹம்மட் தலைமையில் இத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை தவிசாளருமான கலாநிதி அன்வர் எம். முஸ்தபா கலந்து கொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். மேலும் பிரதேச செயலாளர், விளையாட்டு உத்தியோகத்தர்கள், றபீக் கிண்ண தொடரின் பிரதான அனுசரணையாளரான றபீக் கட்டுமான நிறுவனப் பணிப்பாளர் ஏ.எம். றபீக், அம்பாறை மாவட்ட கழகங்களின் பிரதான நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், வீரர்கள் எனப் பலரும் கலந்துகொள்ள உள்ளதாக பிளாஸ்டர் விளையாட்டுக்கழக பொதுச்செயலாளர் ஏ.சி.எம். நிஸார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .