Shanmugan Murugavel / 2021 மார்ச் 25 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். கார்த்திகேசு
அம்பாறை திருக்கோவில் குட்னிக் விளையாட்டுக் கழகத்துக்கான கழகச் சீருடை அறிமுகமும், நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றிருந்தன.
இந்நிகழ்வுகள் குட்னிக் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் கே. அருட்செல்வம் தலைமையில் கழக மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றிருந்தன.
இதன்போது அதிதிகளின் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியதுடன், கழகத்தில் இருந்து மரணித்த விளையாட்டு வீரர்களுக்கான பிரார்த்தனைகளும் இடம்பெற்றிருந்தன.
இதனைத் தொடர்ந்து கழகத்துக்கான சீருடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டு இருந்ததுடன், கழகத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த கழகத்தின் உறுப்பினர் எஸ். சசிகரனுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்து இருந்தனர்.
இந்நிகழ்வில், கிராம சேவை உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர், விளையாட்டு கழகத்தின் நிர்வாகிகள், சிரேஷ்ட உறுப்பினர்கள் கழக வளர்ச்சியில் பங்களிப்பு செய்து வருகின்ற சமூக சேவையாளர்கள், கழக வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
6 hours ago
6 hours ago
04 Dec 2025
04 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
04 Dec 2025
04 Dec 2025