2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

யுனைட்டெட்டை வென்று சம்பியனானது வீறியல்

Shanmugan Murugavel   / 2021 மே 27 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான யூரோப்பா லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான வீறியல் சம்பியனானது.

போலந்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டுடனான போட்டியில் பெனால்டியில் வென்றே வீறியல் சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியின் வழமையான நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் போட்டி முடிவடைந்ததுடன், மேலதிக நேரத்திலும் கோலெதுவும் பெறப்படாத நிலையில், பெனால்டியில் 11-10 என்ற ரீதியிலேயே வீறியல் வென்று சம்பியனானது.

வீறியல் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜெரார்ட் மொரேனோவும், யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை எடின்சன் கவானியும் பெற்றிருந்தனர்.

யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் டேவிட் டி கியாவின் பெனால்டியே தடுக்கப்பட்ட நிலையில், போட்டியில் பங்கேற்ற மிகுதி வீரர்கள் அனைவரும் பெனால்டியை உட்செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .