2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

சம்பியனானது அறுகம்பை விளையாட்டுக் கழகம்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 15 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பைஷல் இஸ்மாயில்

அக்கரைப்பற்று உதைப்பந்தாட்ட அபிவிருத்தி லீக்கின் பி பிரிவுத் தொடரில் அறுகம்பை விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

பொத்துவில் அருகம்பே பொது விளையாட்டு மைதானத்தில், லீக்கின் சுற்றுப் போட்டிக் குழுத் தலைவர் ஏ.எச். ஹம்சா சனூஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், அக்கரைப்பற்று எஃப்.ஏ.சி கழகத்தை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றே அறுகம்பை சம்பியனானது.

இறுதிப் போட்டிக்கு, பிரதம அதிதியாக லீக்கின் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமாகிய அஸ்மி ஏ. கபூர் கலந்து கொண்டு சம்பியனான அறுகம்பைக்கு கிண்ணத்தை வழங்கி வைத்ததோடு, இரண்டு அணியினருக்கும் பதக்கம் அணிவித்து கெளரவித்தார்.

தவிர, இறுதிப் போட்டியில் லீக்கின் பொதுச் செயலாளர் ஊடகவியலாளர் எம்.ஐ.எம். றியாஸ் அதிபர் உட்பட பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கிஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கால்பந்தாட்ட அபிவிருத்தி லீக்கின் வளர்ச்சிக்காக பாரிய தியாகங்களைச் செய்து அர்ப்பணிப்புகளுடன் செயற்பட்டு வரும் தலைவர் அஸ்மி ஏ. கபூருக்கு அறுகம்பை விளையாட்டுக் கழகத்தால் விசேட கெளரவம் வழங்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .