2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

கிரிக்கெட் அணிக்கான சீருடை அறிமுகம்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 12 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பைஷல் இஸ்மாயில்

லக்கி விளையாட்டுக் கழகத்தின் கடின பந்து கிரிக்கெட் அணிக்கான புதிய சீருடை அறிமுக நிகழ்வு, அட்டாளைச்சேனை பரா சொப்பிங் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

லக்கி விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம். அறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கெளரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் வை.எல். நியாஸ், மக்கள் காங்கிரஸ் ஒலுவில் அமைப்பாளர் எம்.ஜே.எம். அஸ்ஹர், லக்கி விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் ஏ.எச்எம். கியாஸ் ஆசிரியர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் புதிய சீருடைகளை அறிமுகம் செய்து வைத்ததுடன் லக்கி விளையாட்டுக்கழகத்தின் சகல வீரர்களுக்கும் புதிய சீருடையை வழங்கி வைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .