2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

சம்பியனான புத்தளம் சோஷியல் அணி

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 - எம்.யூ.எம். சனூன்

புத்தளம் சவீவபுரம் கரப்பந்தாட்ட மைதானத்தில் மின்னொளியில் அண்மையில் நடைபெற்ற கரப்பந்தாட்டத் தொடரில், புத்தளம் நகரின் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட சோஷியல் அணி சம்பியனாகியுள்ளது.

அணிக்கு ஐந்து பேர்களைக் கொண்ட 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், புத்தளம் லயன்ஸ் கழக அணியை வென்றே சோஷியல் அணி சம்பியனாகியிருந்தது.

சோஷியல் கரப்பந்தாட்டக் கழகத்தின் மூத்த பொறுப்பாளர் எம். முளப்பர் மத்தியஸ்தர்களுக்கான நன்றிச் சின்னங்களையும், இரண்டமிடத்தைப் பெற்றுக் கொண்ட லயன்ஸ் க்ளப் அணிக்கான கிண்ணத்தை சாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கச் செயலாளர் ஏ.டபிள்யூ. நசீபும், சோஷியல் அணிக்கான சம்பியன் கேடயத்தை, அவ்வணியின் மூத்த கரப்பந்தாட்ட வீரர் முஹம்மது நியாஸும் வழங்கி வைத்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .