Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 ஜனவரி 25 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த, பிளாஸ்டர் பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மாஸ்டர் பிளாஸ்டர் அணி சம்பியனாகியது.
சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய மைதானத்தில், கழக முகாமையாளர் எம்.எல். பஸ்மீரின் தலைமையில் நேற்று நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், றெட் லயன்ஸ் அணியை வென்றே மாஸ்டர் பிளாஸ்டர் சம்பியனானது.
இறுதிப் போட்டியில், முதலில் துடுப்படுத்தாடிய மாஸ்டர் பிளாஸ்டர், அணித்தலைவர் ஆஸாத்தின் அதிரடியான துடுப்பாட்டத்தால் 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 138 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய றெட் லயன்ஸ், 10 ஓவர்களில் 8 விக்கெட் 110 ஓட்டங்களையே பெற்று 27 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இறுதிப் போட்டியின் நாயகனாக ஆஸாத்தும், தொடரின் நாயகனாக றெட் லயன்ஸின் ஏ. எச் ஷிபானும் தெரிவாகினர்.
இறுதிப் போட்டியில், அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் டில்ஷான் அதாஉல்லா, இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளன பொதுச்செயலாளரும் சர்வதேச கால்பந்தாட்ட மத்தியஸ்தருமான அலியார் பைஸர், சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய அதிபர் ஏ.சி. ஷரீபுத்தீன், உதவியதிபர் டீ.கே.எம். சிராஜ், கழக தவிசாளர் ஏ.எல். முஹம்மட், கழக தலைவர் முகம்மட் இம்தாத், கழக பொதுச்செயலாளர் ஏ.சி.எம். நிஸார், தொழிலதிபர்கள் எனப் பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
4 hours ago