2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

சம்பியனான லைவ் லைன் வஸ்துவா

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வத்தளை லைவ் லைன் பிட்னஸ் உடற்பயிற்சி நிலையம் ஏற்பாடு செய்த தொடரில், லைவ் லைன் வஸ்துவா அணி சம்பியனாகியது.

 அணிக்கு 10 பேர் கொண்ட, 11 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியானது அண்மையில் வத்தளை ஹூனுப்பிட்டி, டிங்கியாவத்தை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றபோது பிளக்ஸ் ஹற்ஸை வென்றே லைவ் லைன் வஸ்துவா சம்பியனாகியது.

சம்பியன் கிண்ணத்துக்கான வெற்றிக் ​கிண்ணத்தை லைவ் லைன் வஸ்துவாக்கு வத்தளை-மாபோல நகரசபை உறுப்பினர் நிமல்சிறி கொறலே வழங்கியிருந்தார். இரண்டாமிடம் பெற்ற பிளக்ஸ் ஹற்ஸுக்கான கிண்ணத்தை லைவ் லைன் பிட்னஸ் உரிமையாளர் இராஜகோபால் ஸ்ரீசங்கர் வழங்கியிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .