2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

ஸ்பெய்ன் குழாமில் றாமோஸ் இல்லை

Shanmugan Murugavel   / 2021 மே 25 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கான ஸ்பெய்ன் குழாமில், அவ்வணியின் முன்னாள் தலைவரான சேர்ஜியோ றாமோஸ் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

காயத்தால் அவதிப்படும் 35 வயதான றாமோஸ், இவ்வாண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர் ஒரு போட்டியில் மாத்திரமே விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் ஸ்பெய்னுக்காக 180 போட்டிகளில் றாமோஸ் விளையாடியுள்ளார்.

குழாம்: உனை சிமோன், டேவிட் டி கியா, றொபேர்ட் சஞ்சேஸ், ஜொஸெ கயா, ஜோர்டி அல்பா, போல் டொரஸ், அய்மெரிக் லபோர்ட்டே, எரிக் கர்சியா, டியகோ லொரன்டே, சீஸர் அத்பிலிகெட்டா, சேர்ஜியோ புஷ்கட்ஸ், றொட்றி, பெட்ரி, தியாகோ அல்கான்டரா, கொகே, பேபியன் ருய்ஸ், மார்கோஸ் லொரண்டே, டனி ஒல்மோ, மிகேல் ஒயர்ஸ்பல், அல்வரோ மொராட்டா, ஜெரார்ட் மொரேனோ, பெரன் டொரஸ், அடம் ட்ரரோரே, பப்லோ சரபியா.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .