Shanmugan Murugavel / 2021 ஜூன் 12 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது கிரிக்கட் சங்கத்தின் பொதுக்கூட்டமும் 2021/2022ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவும் நாட்டின் இன்றைய சுகாதார சட்டதிட்டங்களுக்கமைவாக தொழிநுட்ப செயலியினுடாக அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைவராக சஹரியன் விளையாட்டுக் கழக எம்.எச்.ஏ. கால்தீன் தெரிவு செய்யப்பட்டார். மேலும் செயலாளராக லெவிண் ஹீரோஸ் வீரர் இல்யாஸ் அஸீஸூம், பொருளாளராக விளாஸ்டர் விளையாட்டுக் கழக வீரர் எம்.ஜெ.எம். தாஜுதீனும், தவிசாளராக ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழக எஸ். றிழ்வானும் தெரிவுசெய்யப்பட்டனர்.
பிரதித் தலைவராக, ஒஸ்மானியன் விளையாட்டுக் கழக எம்.வை.எம். அரபாத், உப செயலாளராக வ்ரவ் லீடர்ஸ் வீரர் ஏ.எம். பாஹீர், அமைப்பாளராக வ்ரவ் லீடர்ஸ் வீரர் ஏ.எம். நளீம், நிர்வாக சபை உறுப்பினராக கிங் கோர்சஸ் வீரர் எம்.பி.எம். ரஜாய் ஆகியோரும் ஆலோசனை சபை உறுப்பினர்களாக பிராந்திய கழகங்களின் முகாமையாளர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
கூட்டத்தில் சாய்ந்தமருது விளையாட்டு உத்தியோகத்தர் எஸ். சபூர்தீன், கிழக்கு மாகாண கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் சித்தார்த் லியனாராய்ச்சி, அம்பாறை மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எம்.பி.எம். றஜாய் உட்பட பிராந்திய கழகங்களின் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்
27 minute ago
36 minute ago
40 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
40 minute ago
50 minute ago