2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை?

Shanmugan Murugavel   / 2021 மே 27 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது டாக்காவில் நாளை மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்துள்ள இலங்கை, ஆறுதல் வெற்றியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் களமிறங்குகின்றது.

அந்தவகையில், இலங்கையின் பந்துவீச்சானது குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்ளத்தக்கவாறு மோசமாக இல்லாத நிலையில் துடுப்பாட்டமானது அதல பாதாளத்தில் உள்ளது.

ஆக, குழாமில் வெளியே இருக்கின்ற நிரோஷன் டிக்வெல்ல யாரையைவது பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அணித்தலைவர் குசல் பெரேரா, உப அணித்தலைவர் குசல் மென்டிஸ் ஆகியோரும் சொல்லிக் கொள்ளும்படியான பெறுபேறுகளை விரைவில் வெளிப்படுத்த வேண்டிய அழுத்தத்தில் காணப்படுகின்றனர்.

இதேவேளை, இலங்கைக்கு இரண்டு போட்டிகளிலும் ஆபாத்தாந்தனவாக இருக்கின்ற முஷ்பிக்கூர் ரஹீமின் விக்கெட்டையும் விரைவில் கைப்பற்றுவது குறித்து இலங்கை சிந்தித்தாக வேண்டும்.

மறுப்பக்கமாக பங்களாதேஷில் லிட்டன் தாஸ் போன்றோர் தொடர்ச்சியாக பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய அழுத்தத்தில் உள்ளனர். தவிர, குழாமுக்கு வெளியேயுள்ள மஹெடி ஹஸன், செளமியா சர்கார் ஆகியோருக்கு இப்போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .