2021 ஜூலை 28, புதன்கிழமை

றியல் மட்ரிட்டிலிருந்து விலகிய ஸிடான்

Shanmugan Murugavel   / 2021 மே 27 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் முகாமையாளர் ஸினடி ஸிடான், தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

றியல் மட்ரிட்டுடனான ஒப்பந்தத்தில் ஓராண்டை இன்னும் ஸிடான் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஸிடானின் முடிவுக்குத் தாங்கள் மதிப்பளிக்க வேண்டுமென அறிக்கையொன்றில் றியல் மட்ரிட் தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை றியல் மட்ரிட்டின் முகாமையாளராக இருந்த ஸிடான், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின்  சம்பியன்ஸ் லீக்கை மூன்று தடவைகளும், லா லிகாவை ஒரு தடவையும் வென்ற நிலையில் விலகி, பின்னர் 10 மாதங்களில் மீண்டும் திரும்பி கடந்த பருவகாலத்தில் லா லிகா பட்டத்தை மீண்டும்  வென்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .