2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

சாதனை வீரர்கள் கௌரவிப்பு விழா

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 12 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை அல் நஜா விளையாட்டுக் கழகத்தின் சாதனை வீரர்கள் கௌரவிப்பு விழாவும், கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆர்.டி.டிஸ். கட்டடத்தில் நேற்று நடைபெற்றது.

விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.எம். இத்ரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளருமாகிய எஸ்.எம்.எம். முஷாரப் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினரின் வெளிமாவட்ட இணைப்பாளர் வை.எல்.எம். நியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.கே. அமீர், கோணாவத்தை ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் எஸ்.எம். அமீன், கவிஞர் ஈழமதி ஜப்பார், கழகத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் ஆசிரியருமான எம்.ஐ. ஹாபீழ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த கழகத்தின் வீரர்களான ஏ.எம். றிஸ்வான், ஏ.ஆர். நிக்காஸ் ஆகியோருக்கும் கழகத்தின் பெயர் சூட்டிய ஆரம்பகால உறுப்பினர் ஏ.பி. அன்சார், கழகத்தின் தலைவர் எஸ்.எம். இத்ரீஸ் ஆகியோரை முஷாரப் பொன்னாடை போர்த்தி ஞாபகச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .