எஸ்.எம்.அறூஸ் / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அறுகம்பையில் கடந்த வாரயிறுதியில் நடைபெற்ற தேசிய திறந்த அலைச்சறுக்குப் போட்டியில் ஆண்களுக்கான திறந்த மட்ட போட்டியில் சம்பியனாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட அறுகம்பை விளையாட்டுக் கழகத்தின் அசங்க சஞ்சீவ தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாமிடத்தை இஸ்ரேல் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய பார் பெற்றுக்கொண்டதுடன், மூன்றாமிடத்தை அவுஸ்திரேலிய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய லியாம் முராட் பெற்றுக்கொண்டார். இப்போட்டி நிகழ்ச்சியில் நான்காமிடத்தை இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அறுகம்பை விளையாட்டுக் கழகத்தின் மிலான் பெற்றுக்கொண்டார்.
பெண்களுக்கான திறந்த மட்டப் போட்டியில் சம்பியனாக தென்னாபிரிக்க நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்து கொண்ட நிக்கிட்டா ரொப் சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டார். இரண்டாமிடத்தை எஸ்தோனியா நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய குறூட் லீசன் பெற்றுக்கொண்டதுடன் மூன்றாமிடத்தை இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுனாரா ஜெயமன்ன பெற்றுக்கொண்டார்.
கழக மட்ட ஆண்கள் பிரிவில் சம்பியனாக வெலிகம விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய லக்ஸித மதுசான் தெரிவுசெய்யப்பட்டார். இரண்டாமிடத்தை அறுகம்பை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த அஸங்க சஞ்சீவ பெற்றுக்கொண்டதுடன், மூன்றாமிடத்தை அறுகம்பை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த அஸித்த பிரபாத் பெற்றார்.
17 minute ago
32 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
32 minute ago
38 minute ago
46 minute ago