2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

பசறை பெண் சாதனை

Kogilavani   / 2021 மார்ச் 28 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

2021இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி தொடரில், பூப்பந்து போட்டி தொழில்நுட்ப அலுவலராக பசறையைச் சேர்ந்த அகல்யா என்பவர் பங்கேற்கவுள்ளார். 

பசறை தமிழ் தேசிய பாடசாலையின் விளையாட்டுத்துறை ஆசிரியையாக அவர் கடமையாற்றி வருகின்றார்.

இவர் இலங்கை ஆசிரியர் சேவையில் இருந்து, பூப்பந்து (பெட்மின்டன்) போட்டிக்கு அலுவலராக செல்லும் முதலாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு உலகளவில் தமிழர் சார்பில் முதல் பெண் நபராகவும் இவர் மாத்திரமே இவ்வாய்ப்பைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊவா மாகாணத்துக்கும் பசறை தமிழ் தேசிய பாடசாலைக்கும், மலையகத்துக்கும் பெருமைச் சேர்த்த அவருக்கு, பாராட்டுகள் குவிகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .