Shanmugan Murugavel / 2021 மே 28 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் (ODI), 278 ஓட்டங்களை இலங்கை பெற்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், மிர்பூரில் இன்று நடைபெற்ற குறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் குஷல் பெரேரா, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
இலங்கையணி சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய அஷேன் பண்டார, தசுன் ஷானக, லக்ஷன் சந்தகான், இசுரு உதானவை நிரோஷன் டிக்வெல்ல, ODI-இல் அறிமுகத்தை மேற்கொண்ட சாமிக கருணாரத்ன, ரமேஷ் மென்டிஸ், பினுர பெர்ணான்டோ ஆகியோர் பிரதியிட்டிருந்தனர். பங்களாதேஷ் சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய லிட்டன் தாஸை மொஹமட் நைம் பிரதியிட்டிருந்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை, குஷல் பெரேரா, தனுஷ்க குணதிலக மூலம் வேகமான ஆரம்பத்தைப் பெற்றது. பின்னர் குணதிலக 39 (33), அடுத்து வந்த பத்தும் நிஸங்க ஆகியோர் தஸ்கின் அஹ்மட்டின் ஒரே ஓவரில் வீழ்ந்தனர்.
இந்நிலையில், அடுத்து வந்த உப அணித்தலைவர் குசல் மென்டிஸுடன் இணைந்து குசல் பெரேரா இனிங்ஸை கட்டியெழுப்பிய நிலையில், 22 (36) ஓட்டங்களுடன் தஸ்கின் அஹ்மட்டிடம் மென்டிஸ் வீழ்ந்தார். பின்னர் தொடர்ந்து வந்த தனஞ்சய டி சில்வாவின் பங்களிப்பில் சதத்தைப் பூர்த்தி செய்த குஷல் பெரேரா, 120 (122) ஓட்டங்களுடன் ஷொரிஃபுல் இஸ்லாமிடம் வீழ்ந்தார்.
இதையடுத்து வந்த நிரோஷன் டிக்வெல்ல குறிப்பிட்ட நேரத்தில் ரண் அவுட்டானதுடன், இதற்கடுத்து வந்த வனிடு ஹஸரங்கவும் 18 (21) ஓட்டங்களுடன் தஸ்கின் அஹ்மட்டிடம் வீழ்ந்தார்.
அந்தவகையில், இறுதி வரை ஆட்டமிழக்காதிருந்த தனஞ்சயவின் 55 (70) ஓட்டங்களுடன் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை இலங்கை பெற்றிருந்தது.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025