R.Tharaniya / 2025 மே 15 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குவானை பரி.யோவான் தமிழ் கல்லூரியின் 2025ம் ஆண்டுக்கான பழைய மாணவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த 10ம் திகதி முதல் 12ம் திகதி வரை நடைபெற்றது.
இறக்குவானை பொது மைதானத்தில் மூன்று தினங்கள் நடைபெற்ற போட்டியில் 1992ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை கல்வி பயின்ற பழைய மாணவர்கள் களமிறங்கியிருந்தனர்.
இந்த போட்டிகளில் 1992ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை கல்வி பயின்ற கல்வி பொது தராதர சாதாண தர மாணவர்கள், லெஜன்ட் அணி பிரிவிலும், அதன்பின்னரான காலத்தில் கல்வி பயின்ற கல்வி பொது தராதர சாதாண தர மாணவர்கள் இளையோர் அணி பிரிவிலும் போட்டிகளை எதிர்நோக்கியிருந்தனர்.
இந்த நிலையில், லெஜன்ட் அணி சார்பில் 2002ம் ஆண்டு மாணவர்கள் (ரோயல் கிங்ஸ்) சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டதுடன், 1994ம் ஆண்டு மாணவர்கள் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்தினார்கள்.
அத்துடன், இளையோர் அணி சார்பில் போட்டிகளில் கலந்துக்கொண்ட 2015ம் ஆண்டு சம்பியன் பட்டத்தை வென்றது.
2002ம் ஆண்டு கல்வி பொதுதராதர சாதாரண தர மாணவர்கள் (ரோயல் கிங்ஸ்), இரண்டாவது முறையாக கிரிக்கெட் போட்டிகளில் சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டனர்.
இறக்குவானை பரி.யோவான் தமிழ் கல்லூரி வரலாற்றில் இரண்டு முறை சம்பியன் பட்டத்தை வெற்றிக் கொண்ட ஒரே அணியாக 2002ம் ஆண்டு அணி (ரோயல் கிங்ஸ்) திகழ்கின்றமை விசேட அம்சமாகும்.



24 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
3 hours ago
4 hours ago