2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தடை அனுபவித்த வீரர் இணைப்பு

R.Tharaniya   / 2025 மே 15 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதில் இளம் தொடக்க வீரரான சாம் கான்ஸ்டாஸ், காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் ஜூன் 11 முதல் 15-ம் திகதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை, செவ்வாய்க்கிழமை (13) நேற்று அறிவித்தது.

இதில் இந்திய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டிராபியில் கடைசி இரு ஆட்டங்களில் அறிமுக வீரராக இடம் பெற்ற இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற இலங்கை டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படாத நிலையில் தற்போது மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலி அணி விவரம்:

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், மாட் குஹ்னெமன், நேதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், ஜோஷ் ஹேசில்வுட். மாற்று வீரர்: பிரெண்டன் டாகெட்.

தென் ஆப்பிக்க அணியின் விவரம்:

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை தென் ஆப்பிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் சமீபத்தில் போதை மருந்து விவகாரத்தில் சிக்கி ஒருமாதம் தடையை அனுபவித்த வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவும் சேர்க்கப்பட்டுள்ளார். 

டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், எய்டன் மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரெய்ன், மார்கோ யான்சன், கார்பின் போஷ், வியான் முல்டர், கேசவ் மகாராஜ், செனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, டேன் பேட்டர்சன், காகிசோ ரபாடா.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X