2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

இலவச கல்விக்காக 10 தொலைக்காட்சி அலைவரிசைகள் அறிமுகம் செய்யும் டயலொக் ஆசிஆட்டா

Editorial   / 2021 செப்டெம்பர் 10 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி  டயலொக் டெலிவிஷன்  மற்றும் ViU App இல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் 10 கல்விசார்  அலைவரிசைகளை  பயன்படுத்த கல்வி அமைச்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது. 

முதல் கட்டமாக 4 அலைவரிசைகள் 2021 செப்டெம்பர் 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் இது எதிர்வரும் மாதங்களில் மொத்தம் பத்தாக (10) அதிகரிக்கப்படவுள்ளது. இந்த அலைவரிசைகளை டயலொக் டிஜிட்டல் செட்டலைட் டிவி மற்றும் எந்தவொரு ஸ்மார்ட்போனிலும் ViU மொபைல் டிவி App ஐ  டவுன்லோட் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் எவ்விதமாக கட்டணங்களும் இன்றி இலவசமாக கிடைக்கின்றது.
 
இந்த அலைவரிசைகளுக்கான உள்ளடக்கம், கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள், தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சு மற்றும் தேசிய கல்வித்திட்டத்தின் படி தேசிய கல்வி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. 

நெனச சாதாரண தரம் சிங்களம் (அலைவரிசை இலக்கம். 22) நெனச சாதாரண தரம் தமிழ் (அலைவரிசை இலக்கம்.23), நெனச உயர்தரம்  சிங்களம் (அலைவரிசை இலக்கம்.  24) மற்றும் நெனச உயர்தரம் தமிழ் (அலைவரிசை இலக்கம்.25) உள்ளிட்ட புதிய அலைவரிசைகளை அனைத்து டயலொக் டெலிவிஷன் வாடிக்கையாளர்களும் மற்றும் ViU App பாவனையாளர்களும் டயலொக் வலையமைப்பில் எவ்விதமான டேட்டா கட்டணங்கள் இன்றி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 

இந்த நான்கு அலைவரிசைகளின் ஊடாக அனைத்து மாணவர்களுக்கும் வரவிருக்கும் சாதாரண தர மற்றும் உயர்தர தேர்வுகளுக்கான அனைத்து பாடங்களும் புதுமையான கற்பித்தல் நுட்பங்களுடன் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் நடாத்தப்படவுள்ளன. 

மேலும், Andriod, IOS, மற்றும் Huawei app gallery இல்  பெற்றுக்கொள்க்கூடிய  ViU மொபைல் டிவி App மூலம் 2 மணிநேரம் வரை டிவி அலைவரிசைகளை rewind  செய்தும் கடந்த 3 நாட்களில் தவறவிட்ட பாடங்களை catch up செய்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
 
கல்வி அமைச்சர் கௌரவ. தினேஷ் குணவர்தன கருத்து தெரிவிக்கையில், "இந்த கொவிட் தொற்று பரவலின் காரணமாக கல்வித் துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டமையே, எங்கள் பிள்ளைகளின் கற்றல் தொடர்ச்சிக்கான தீர்வுகளைக் கண்டறிய உதவியது.  கல்வி அமைச்சின் இந்த முயற்சியானது ஒவ்வொரு பிள்ளைக்கும்  புதிய தொழில்நுட்பம் மூலம் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கல்வித் துறையில் ஒரு புதிய புரட்சியாகும்.
 
இது  குறித்து கருத்து தெரிவித்த  கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த, "தேசிய கல்வி நிறுவனம், கல்வி அமைச்சு, கல்வி சீர்திருத்த அமைச்சு மற்றும் அனைத்து தொடர்புடைய அமைச்சுகளுடன் இணைந்து இந்த கல்வி உள்ளடக்கத்தை தேசிய பாடத்திட்ட தரத்திற்கு ஏற்ப உருவாக்கியுள்ளார்கள். இந்த வசதியான தளங்களை மீண்டும் அரசு அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக விரிவுபடுத்தியதற்காக டயலொக் நிறுவனத்திற்கு நன்றிகளை  தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த முயற்சியை இலங்கையின் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றமாக நான் பார்க்கிறேன். இந்த திட்டத்தின் மூலம் இலங்கை முழுவதிலும் உள்ள பிள்ளைகள்   கணிசமானளவு  பயனடைவார்கள் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தேசிய கல்வி நிறுவனம் மற்றும் டயலொக், கல்வி உள்ளடக்கத்தை தொகுக்க பெரும் முயற்சிகளை வழங்கியது. இந்த முயற்சி பிள்ளைகளுக்கும் மற்றும் நாட்டின் கல்வித் துறைக்கும்  பெரிதும் சேவை செய்யும் என்று நான் நம்புகிறேன், என்று முன்னாள் கல்வி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான கெளரவ (பேராசிரியர்) ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.
 
"கல்வி அமைச்சு மற்றும் டயலொக்கின்  நெனச முயற்சியால் நாட்டின் கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கும், நவீனமயமாக்கும் தேசிய அளவிலான திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்க முடிந்தது. கல்வி முறை மறுசீரமைப்பு தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பது எங்கள் நம்பிக்கை. டயலொக் உடன் இணைந்து நாட்டின் அடுத்த தொழில்நுட்ப புரட்சியை நோக்கி நம் பிள்ளைகளை தயார்படுத்த நாங்கள் தயாராகவுள்ளோம். ”என்று இளைஞர் மற்றும் விளையாட்டு துறை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாட்டு மாநில அமைச்சர் நாமல் ராஜபக்ச  தெரிவித்தார்.
 
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில், "இந்த சவாலான காலங்களில் தடையில்லா கல்வியை வழங்குவதற்கான  எங்கள் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கல்வி அலைவரிசைகளை நாடளாவிய ரீதியில்  உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலவசமாக வழங்குவதில்  நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நெனச சிங்களம் மற்றும் தமிழ் அலைவரிசைகளின் ஊடாக உயர்தரம் மற்றும் சாதாரணதர உள்ளடக்கத்தை இலவசமாக விரிவுபடுத்தலானது  நாடு முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு அவர்களின் அபிலாஷைகளை அடைய சமமான கல்வியை  வழங்குவதற்கான டயலொக்கின் மேலான முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். 
 
நாடளாவிய ரீதியில் உள்ள மாணவர்களின் கல்வி முன்னெடுப்புகளை ஆதரிக்கும் டயலொக்கின் தொடர்ச்சியான முயற்சிகளில் இது மற்றொரு மைல்கல்லாகும். இந்த முயற்சிக்கு மேலதிகமாக, Nenasa TV, Nenasa Smart School, Nenasa App மற்றும் கட்டணமில்லா 1916 உதவி இலக்கம் ஊடாக டயலொக் பல்வேறு கல்வி தளங்களை நீண்டகாலமாக வழங்குகிறது.  இவற்றுக்கு மேலதிகமாக  டயலொக் டெலிவிஷன்  மற்றும் ViU App மூலம் குரு டிவி அலைவரிசையையும்  இலவசமாக   விரிவுபடுத்தியுள்ளது. வீட்டிலிருந்து ஆன்லைன் கற்றலை எளிதாக்குவதற்காக ‘நெனதிரி டேட்டா புலமைப்பரிசில்’ திட்டத்தின் கீழ் அவசியமான 100,000 பாடசாலை மாணவர்களுக்கு டேட்டா புலமைப்பரிசில்களை வழங்கும் திட்டம் டயலொக்கினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.   மேற்கொண்டுள்ளது. மேலும், இ-தக்ஸலாவ (e-Thaksalawa)  தேசிய கற்றல் தளம் உள்ளடங்களாக கற்றல் மேலாண்மை அமைப்பு மற்றும் பல்கலைக்கழக மானியத்தின் கீழ் உள்ள அரச பல்கலைக்கழகங்களின் அனைத்து உத்தியோகபூர்வ e-Learning தளங்களையும் எவ்விதமான டேட்டா கட்டணமும் இன்றி இலவசமாக வழங்குகின்றது.

About Dialog Television

Dialog Television, a fully owned subsidiary of Dialog Axiata PLC is Sri Lanka's undisputed leader in digital satellite PAY TV entertainment, providing customers the best value and viewing via strategic partnerships with the best of global content providers. Dialog Television is proud to bring the best in entertainment to over 1,600,000 Sri Lankan homes. Dialog Television is the leading player in the pay TV market in Sri Lanka and broadcasts more than 130 channels inclusive of 10 HD channels under a variety of genres from Sports, Action to Comedy and Edutainment. Dialog TV has enabled its customers to experience Live TV and Video on Demand services including catch-up TV and rewind TV at home and on the go via Dialog ViU App as well as ViU Hub and ViU Mini devices, the latest addition to its device range which enables customers to experience the latest Android features powered by Google.

படத்தில் இடமிருந்து வலம் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின்  குழும தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுபுன் வீரசிங்ஹ, இளைஞர் மற்றும் விளையாட்டு துறை  மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாட்டு மாநில அமைச்சர் நாமல் ராஜபக்ச, முன்னாள் கல்வி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான கெளரவ (பேராசிரியர்) ஜி. எல். பீரிஸ், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு, பாலர் மற்றும் ஆரம்ப கல்வி, பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் அமைச்சர் கௌரவ பியால் நிஷாந்த டி சில்வா, மற்றும் கல்வி அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன,

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின்  குழும தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுபுன் வீரசிங்ஹ அவர்கள் கௌரவ அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கல்வி அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன, அவர்களிடம் கையளித்தார். 

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின்  குழும தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுபுன் வீரசிங்ஹ அவர்கள்  கௌரவ அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் உரையாற்றும்  போது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .