Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
A.P.Mathan / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் இந்துக்களின் புனிதத்தலம் திருக்கோணேஸ்வரம். தெட்சண கைலாயம் என்றும் அடிக்கொரு லிங்கம் அமைந்திருக்கும் சிவபூமி என்றும் இலங்காபுரி வேந்தன் இராவணேஸ்வரனால் வழிபடப்பெற்ற திருத்தலம் என்றும் பெருமை பெற்ற அப்புண்ணிய ஷேத்திரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச்சிறப்புடையது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருஞானசம்மந்தமூர்த்தி நாயனாரால் தேவாரத் திருப்பதிகமும் கி.பி. 15ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாத சுவாமிகளினால் திருப்புகளும் அருளப்பெற்ற கீர்த்தியும் வரலாற்றுப் பெருமையும் மிக்க இத்திருத்தலத்தில் 33 அடி உயரமான தியான நிலை சிவபெருமானின் சிலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இச்சிலைகளை அழகுற நேர்த்தியாக வடிவமைத்து நிர்மாணித்தவர் தமிழ்நாடு காரைக்காலைச் சேர்ந்த சிற்பாசிரியர் கலியபெருமாள் விஐயன் ஆவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago