2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச வர்த்தக கண்காட்சி...

Menaka Mookandi   / 2013 ஜனவரி 18 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், கு.சுரேன், சுமித்தி, கிரிசன்


சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்த இக்காண்காட்சியை அமைச்சர்களான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, றிசாட் பதியுதீன் மற்றும் யாழ் இந்தியத் துணைத்தூதுவர் மகாலிங்கம் ஆகியோர் நாடாவை வெட்டி திறந்து வைத்தனர்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு, இலங்கை வர்த்தக கைத்தொழில் சங்கங்களின் சம்மேளனம், யாழ் வர்த்தக கைத்தொழில் சம்மேளனம், யாழ் மாநகரசபை இலங்கை மாநாடுகள் பணியகம், யாழ் இந்தியத் துணைத் தூதரகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன.

இன்று தொடக்கம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை காலை 10 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை நடைபெறவுள்ள இந்தக்கண்காட்சி மூலம் முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குனர்கள், வர்த்தக துறையினர் ஆகியோரும் பொதுமக்களும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இக்கண்காட்சியில் இலங்கைக்கான இந்தோனேசியத் தூதுவர் மற்றும் யாழ் மாநகர முதல்வர் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.











You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X