2026 ஜனவரி 31, சனிக்கிழமை

உ க்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த ரஷ்யா இணக்கம்

Freelancer   / 2026 ஜனவரி 31 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்தி வைக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இணங்கியுள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அமைச்சரவைக் கூட்டத்தின் போது ட்ரம்ப் இதனைக் கூறியுள்ளார்.

யுக்ரைனில் தற்போது நிலவும் அதிக குளிருடனான வானிலையை கருத்திற்கொண்டு ரஷ்ய ஜனாதிபதி தனது தனிப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக ட்ரம்ப்  குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விடயத்தை ரஷ்யா இதுவரை உறுதிப்படுத்தவில்லை என சர்வதேச ஊடகங்களின் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X