Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 23 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் காரணமாக, தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், அது தொடர்பில் அனைவரும் விழிப்புடன் செயற்படுமாறும், தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள இடங்களில் உள்ளவர்களுக்கு, செங்கமாலை, வயிற்றுப்போக்கு, உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடும் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில இடங்களில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்கள் மற்றும் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள இடங்களில் வசிப்பவர்கள், சுட்டாரிய நீரை பருகுமாறும், உணவப்பொருட்களை இளையான் மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், பொது போக்குவரத்துகளில் ஈடுபட்டதன் பின்னரும், மலசலகூடத்துக்கு சென்று வந்ததன் பின்னரும் சவர்க்காரம் இட்டு கைகளை கழுவ வேண்டும் எனவும், விசேடமாக கீரை வகைகளை உட்டுகொள்வதை தவிர்க்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் டெங்கு நோய் ஏற்படக்கூடும் என்பதால், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
32 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
1 hours ago