Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
J.A. George / 2022 மே 09 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி முகத்திடலில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள் மீது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து அந்தப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நிலவியது.
அலரி மாளிகையில் நேற்று(09) காலை பிரதமரை சந்தித்த ஆதரவாளர்கள் அதனை தொடர்ந்து காலி வீதியில் அமைக்கப்பட்டிருந்த மைனாகோகம பகுதியில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அப்பகுதியிலிருந்த கூடாரங்களையும் அகற்றியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமரின் ஆதரவாளர்கள் கோட்டாகோகம பகுதிக்கு சென்று அங்கிருந்த கூடாரங்கள் சிலவற்றை அகற்றியிருந்ததுடன் சில கூடாரங்களை தீயிட்டு கொளுத்தியிருந்தனர்.
இதனையடுத்து, அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் கட்டுப்டுத்துவதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் அழைக்கப்பட்டனர்.
பதற்ற நிலையை தணிப்பதற்கு கண்ணீர்ப்புகை பிரயோகமும் நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, முதலில் மேல் மாகாணத்திலும் பின்னர் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஏற்பட்ட பதற்ற நிலைக்கு மத்தியில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்திருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று(9) இரவு வெளியிட்டிருந்தது. பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ இராணுவ பாதுகாப்புடன் அதிகாலையில் அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்.
உடனுக்குடன் விவரங்களை அறிந்துகொள்ள தமிழ்மிரரின் இந்த சிறப்பு நேரலை பக்கத்துடன் இணைந்திருங்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
4 hours ago