Freelancer / 2024 மே 27 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
i
நடிகர் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி (Good Bad Ugly) திரைப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடர உள்ளதாகக் கூறப்படுகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளார்.
இதன் போஸ்டர் வெளியாகி இரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன், படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஐதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்ததும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் துவங்கும் எனக் கூறப்படுகிறது. அங்கு, அஜித்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னொருபக்கம், நடிகர் விஜய் இப்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் 'தி கிரேடஸ்ட் ஒஃப் ஓல் டைம்” (Goat) படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, பிரஷாந்த், அஜ்மல், மீனாட்சி சௌத்ரி எனப் பலரும் நடித்து வருகிறார்கள்.
இதில் விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் ரஷ்யாவில் பல நாட்கள் தங்கியிருந்து, அங்கு படப்பிடிப்பு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.S
10 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago